No Comments

பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு
இன்று (13/10/2022) உலர் உணவுப்பொருட்கள் பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கு
நவமங்கை நிவாசத்தில் வழங்கிவைக்கப்பட்டது.

வறுமைக்கோட்டுக்கு உட்பட்டவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கிவைப்பு
நவமங்கை நிவாசத்தில் இன்று (10/10/2022) உலர் உணவு பொருட்கள் வறுமைகோட்டுக்குட்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது
No Comments

“நவமங்கை நிவாசம்” முதியோர் இல்லம் / NAVAMANKAI NIVASSAM ELDERS HOME
"நவமங்கை நிவாசம் முதியோர் இல்லம்" 2023 ஜனவரியில் தனது சேவைகளை அதிகாரப்பூர்வமாக வழங்குவதற்காக திறக்கப்படுகின்றது.
மிகவும் சுத்தமான உட்புறச் சூழல் மற்றும் அழகாக வடிவமைக்கப்பட்ட பல்வேறு வசதிகளுடனும் ,விசேட மற்றும் உயர்தர பராமரிப்பை நாங்கள் வழங்குகிறோம்.
வாரத்தில் ஏழு நாட்கள் வெளியிலிருந்து வருபவர்களின் வருகைக்காக திறந்திருக்கும். எங்கள் கண்கவர் முதியோர் இல்லத்தை நீங்களும் பார்வையிடலாம்.
அனைத்து வசதிகளுடன் 40 சொகுசு அறைகள் உள்ளன.
வருகை தருபவர்கள் எங்களுடன் தொடர்பு கொள்ளவும்
சுவர்ண நவரட்ணம் - 0766431691
பிறேம் - ...
No Comments

சர்வ தேசமுதியோர் தினம்
எதிர்காலத்தில் முதியோர் இல்லங்களை புறந்தள்ள வேண்டும்! இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் யாழ் மாவட்ட தலைவர் தெரிவிப்பு
முதியோர்இல்லங்களை நாங்கள் ஏற்றுக் கொள்ளக்கூடாதுபுறந்தள்ள வேண்டும் என்ன இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் யாழ் மாவட்ட கிளை தலைவர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்
நவ மங்கை நிவாசத்தில் இன்று (01-10-2022) இடம்பெற்ற முதியோர் தின நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்
எந்த கஷ்டங்கள்துன்பங்கள் வந்தாலும் நாங்கள் குழந்தைகள் பேரப்பிள்ளைகளுடன் குடும்பத்திலேயே வாழ வேண்டும் ...
No Comments

எமது நிறுவுனர் அவர்கள் அகில இலங்கை சமாதான நீதிவானாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்!!
கோப்பாய் நவமங்கை நிவாச இயக்குனரும் பிரபல சமூக சேவகியும்,வனிதையர் திலகம் "சுவர்ணா நவரத்தினம்"
அவர்கள் இன்று (26/05/2022) வடமாகாண உயர் நீதிமன்றில் அகில இலங்கை சமாதான நீதிவானாக, உயர்நீதி மன்ற நீதிபதி திரு.இரா. கண்ணண் அவர்கள் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
No Comments

சமாதான நீதவானாக பதவியேற்பு
நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளிலான நடமாடும் சேவை யாழ் மத்திய கல்லூரியில் (29-01-2022) நடைபெற்றது. இந் நிகழ்வில் வைத்து எமது நிறுவன நிறுவுனர் சுவர்ணா நவரட்ணம் அவர்கள் சமாதான நீதவானாக நியமனம் பெற்றுள்ளார்
நிகழ்வில் நீதி அமைச்சர் அலி சப்ரி, வெளி விவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
No Comments

வாழ்வக நிறுவன நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டபோது
சுன்னாகம் வாழ்வகத்தில் நிறுவனர் நினைவு நாளும் பரிசில் வழங்கும் நிகழ்வில் (11/01/2022) எமது நிறுவுனர் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டபோது
No Comments

கலைஞர்கள் கௌரவிப்பு
நவமங்கை நிவாசக ஸ்தாபகர் சுவர்ணா நவரட்ணம் அவர்களால் கலைஞர்கள் கௌரவிப்பு
No Comments

எமது ஸ்தாபகர் சுவர்ணா நவரட்ணம் அவர்களுக்கு “வனிதையர் திலகம்” என்ற உயரிய பட்டம் வழங்கப்பட்டது
கல்வியலாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சாதனைப் பெண் சுவர்ணா நவரட்ணம் (ஸ்தாபகர் நவமங்கை நிவாசம்) அவர்களின் சேவை கௌரவிப்பு மற்றும் நூல் வெளியீட்டு விழா 07.11.2021 அன்று கலாநிதி திருமதி. ஜெ.உதயகுமார் (விரிவுரையாளர் யாழ்ப்பாணம் தேசிய கல்வியற்கல்லூரி) அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் கம்பவாரதி மதிப்பிற்குரிய ஜெயராஜ் ஐயா அவர்கள் சாதனைப் பெண்ணிற்கு வனிதையர் திலகம் என்ற உயரிய பட்டத்தை வழங்கியதோடு நூலினையும் வெளியிட்டு வைத்தார்.
No Comments

கம்பவாரதி ஜெயராஜ் நிவாசத்திற்கு வருகை
அன்புக்கும் மதிப்புக்குரிய கம்பவாரதி ஜெயராஜ் ஐயா அவர்கள் கடந்த சனிக்கிழமை (23-04-2021) நிவாசத்திற்கு வருகை தந்து ஆசீர்வதித்தபோது
No Comments