ஸ்தாபகர் :- செல்வி.சுவர்ணலீலா நவரட்ணம் (B.Ed.Hons SLEAS)
மகுட வாசகம்
மங்கையராய்ப் பிறப்பதற்கோர் மாதவம் செய்திடல் வேண்டும்
நோக்கு
ஆதரவற்ற பெண்களின் இயல்பான வாழ்க்கைக்கு வழிகாட்டல்
பணிக்கூறு
- உளநல சமநிலைக்கு உதவிப் புனர்வாழ்வழித்தல்
- சுய ஆற்றலை மேம்படுத்த உதவுதல்
- தொழில்சார் பயிற்சி மூலம் தொழில் வளர்ச்சிக்கு வழிகாட்டுதல்
இலக்கு
இயல்பான வாழ்வில் பாதிப்புக்குள்ளான பெண்களை சீர்மைசெய்து அவர்கள் மகிழ்ச்சியுடன் பூரண மகளிராகவாழ அனைத்து வழிகளிலும் முயற்சி செய்து வெற்றி காணுதல்
நோக்கம்
ஆதரவற்ற பெண்களுக்குப் பாதுகாப்பையும் புனர்வாழ்வு நிலையையும் கொடுத்தல்
செயற்பாடு
- இந்நிலையத்தில் தங்கியுள்ளவர்களுக்கு உடல்உள ஆரோக்கியத்திற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு மீளவும் சமுதாயத்தில் ஒரு வலுவுள்ள பிரஜையாக வாழச் செய்தல்
- இந்நிலையத்தில் தங்கியிருக்கம் பெண்களின் தனித்துவமான ஆற்றலை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பினை வழங்குதல்
- நிலையத்தின் நோக்கம் தொடர்பான சிறப்புக் கூட்டங்கள் கருத்தரங்குகள்ஆய்வுகள் நடாத்துவதற்கு வாய்ப்பை ஏற்படுத்துதல்.
நிர்வாகசபை :
ஸ்தாபகரால் இச்சபை உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர். அவர்களின் செயற்படு தன்மைக்கேற்ப புதியவரை நியமிக்கவும் பொருத்தமற்றவரை விலக்கவும்ஸ்தாபகருக்கு அதிகாரம் உண்டு. எந்த முடிவும் தீர்மானமாக எடுக்க முன் ஸ்தாபகருக்கு அறிவிக்கப்பட்டு அவருடைய சம்மதத்தைப் பெறவேண்டும். ஒவ்வொருமாதமும் பொருத்தமான ஒரு தினத்தில் நிர்வாகசபைகூடி நிலையத்தின் நிலையத்தின் செயற்பாடுகளை மதிப்பீடு செய்வர்.
பதவி வழிக் கடமைகள்:
தலைவர்:
- கௌரவ தலைவர் ஒருவரையும் செயற்பாட்டுத் தலைவர் ஒருவரையும் ஸ்தாபகர் நியமிப்பார்.
- கௌரவ தலைவர் நிலையம் தொடர்பான நிகழ்வுகளுக்குத் தலைமை வகிப்பார்.
- நிலையத்தின் வளர்ச்சி மற்றும் பராமரிப்புத் தொடர்பான ஆலோசனைகளை நிர்வாகக் குழுவுக்கு வழங்குவார்.
- செயற்பாட்டுத் தலைவர் நிர்வாக்குழுக் கூட்டங்களுக்கத் தலைமை வகிப்பதுடன் நிர்வாகத்தைச் செயற்படுத்துவார்.
செயலாளர்
- மாதாந்தக் கூட்டங்களுக்க அறிவித்தல் கூட்ட அறிக்கைகளைத் தயாரித்தல் சமர்ப்பித்தல்
- நிர்வாகச் செயற்பாடுகளுக்கப் பொறுப்பாக இருத்தல்.
- கடிதத் தொடர்புகளை மேற்கொள்ளல்
பொருளாளர்:
- நிதிதொடர்பான சகல நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக இருத்தல்.
- மாதாந்தக் கூட்டத்தில் கணக்கறிக்கை சமர்ப்பித்தல்.
- வருடாந்தக் கூட்டத்தில் கணக்கறிக்கையை வெளிப்படுத்தல்
நிர்வாகசபை உறுப்பினர்:
- நிர்வாகக் குழுக் கூட்டங்களில் தவறாது பங்குபற்றுதல்.
- நிர்வாகக்குழுக் கூட்டங்களில் தீர்மானிக்கப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்த உதவுதல்
வங்கித் தொடர்பு:
வங்கிக் கொடுக்கல் வாங்கல்கள் பொருளாளருடன் தலைவர் அல்லது செயலாளர் கையொப்பமிடுவதன் மூலம் செயற்படுத்தப்படும்.
மருத்துவ நுட்ப ஆலோசனை:
அனுமதி தொடர்பான மருத்துவ நுட்ப ஆலோசனைகளுக்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக்கும் உளநல மருத்துவர் வழிகாட்டியாக இருப்பார்.
கணக்காய்வு:ஆண்டுதோறும் நிர்வாகசபையின் கணக்கறிக்கை அங்கீகரிக்கப்பட்ட கணக்காய்வாளரால் சரிபார்த்து வெளிப்படுத்தப்படல் வேண்டும்.
பணியாளர்:
ஸ்தாபகரின் ஆலோசனைக்கேற்ப தகுதியான பணியாளர்கள் நியமிக்கப்படுவர்.
அனுமதி:
முறையான விண்ணப்பப் படிவத்தை நவமங்கை நிவாச அலுவலகத்தில் பெற்று விண்ணப்பிக்க வேண்டும். அனுமதி தொடர்பாக நிர்வாகக் குழு முடிவுசெய்வதன்முன் அனுமதிக்காக விண்ணப்பிப்பவர்களிடம் மனநல வைத்தியரின் அத்தாட்சிக் கடிதம் அல்லது பிரதேச செயலரின் சிபார்சுக் கடிதம் கோரப்படும்.
கண்காணிப்பு:
ஆலோசனை வழங்குவதற்கோ அல்லது மேற்பார்வைசெய்வதற்கோ வரும் நபர்கள் அல்லது அமைப்புக்கள் நிர்வாகத்தின் அனுமதியைப் பெற்றபின்னரே உள்ளே நுழைய வேண்டும்