No Comments

எமது ஸ்தாபகர் சுவர்ணா நவரட்ணம் அவர்களுக்கு “வனிதையர் திலகம்” என்ற உயரிய பட்டம் வழங்கப்பட்டது
கல்வியலாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சாதனைப் பெண் சுவர்ணா நவரட்ணம் (ஸ்தாபகர் நவமங்கை நிவாசம்) அவர்களின் சேவை கௌரவிப்பு மற்றும் நூல் வெளியீட்டு விழா 07.11.2021 அன்று கலாநிதி திருமதி. ஜெ.உதயகுமார் (விரிவுரையாளர் யாழ்ப்பாணம் தேசிய கல்வியற்கல்லூரி) அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் கம்பவாரதி மதிப்பிற்குரிய ஜெயராஜ் ஐயா அவர்கள் சாதனைப் பெண்ணிற்கு வனிதையர் திலகம் என்ற உயரிய பட்டத்தை வழங்கியதோடு நூலினையும் வெளியிட்டு வைத்தார்.

கம்பவாரதி ஜெயராஜ் நிவாசத்திற்கு வருகை
அன்புக்கும் மதிப்புக்குரிய கம்பவாரதி ஜெயராஜ் ஐயா அவர்கள் கடந்த சனிக்கிழமை (23-04-2021) நிவாசத்திற்கு வருகை தந்து ஆசீர்வதித்தபோது
No Comments

100 குடும்பத்தினர்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது
நவமங்கை நிவாசத்தில் கடந்த சனிக்கிழமை (23.10.2021) வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் 100 குடும்பத்தினர்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது.
இதற்கான அனுசரணை பொறியியலாளர் துதிநாதன் சுரேந்தர்.
No Comments

அறநெறிபாடசாலை 60 மாணவர்களுக்கு வங்கியில் பண வைப்பு!!
நவமங்கை நிவாசத்தில் நடைபெறும் அறநெறிபாடசாலை மாணவர்களுக்கு தலா ரூபா 1000-படி 60 மாணவர்களுக்கு வங்கியில் வைப்பு செய்யப்பட்டு இன்று (20.10.2021) வங்கிப்புத்தகம் கையளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதற்கான அனுசரனையை கனடாவை சேர்ந்த ஹேமா சிதம்பரநாதன் வழங்கினார்.
No Comments

கோப்பாய் ஆதார வைத்தியசாலையில் நவமங்கை நிவாசத்தின் மகத்தான சேவை
Govid 19 ...2ம் கட்ட தடுப்பூசி கோப்பாய் ஆதார வைத்தியசாலையில் ஏற்றும் போது நவமங்கை நிவாசத்தினால் கடமையில் ஈடுபட்டிருக்கும் உத்தியோகத்தர்களுக்கு தேனீர் ,சிற்றுண்டி, மதியபோசனம் என்பன வழங்கப்பட்டது அத்துடன் அங்கு வருகை தருபவர்களுக்கு தண்ணீரும் வழங்கப்படுகின்றது. இந்த சேவையானது இன்றிலிருந்து (28.06.2021) தொடர்ந்து 5 நாட்களுக்கு வழங்கப்படும்.
No Comments

வாழ்வாதார உதவி வழங்கி வைப்பு
வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட குடும்பம் ஒன்றிற்க்காக கனடாவில் வாழும் சுகுணா ஆனந் என்பவரின் அனுசரனையுடன் நவமங்கை நிவாசத்தினால் 5மாத கருவுற்ற பசு தானமாக வாழங்கப்பட்டது. இந் நிகழ்வு 29-04-2021 அன்று எமது நிலையத்தில் நடைபெற்றது
No Comments

நூல் வெளியீட்டு விழா அழைப்பிதல்
No Comments

செல்வன் சாய்ஹரிஸ் அஜெந்தன் அவர்களின் பிறந்த நாள்
கடந்த 13ம் திகதி எமது நிலையத்தில் அகவை மூன்றை மகிழ்வுடன் கொண்டாடிய சாய்ஹரிஸ் அஜெந்தன் நலமுடன் நாநிலம் போற்ற பல சிறப்புகளுடன் வாழ வாழ்த்துகின்றோம்
No Comments

பேராசிரியர் தனபாலன் அவர்களின் பிறந்தநாள்
கடந்த 11ம் திகதி பேராசிரியர் தனபாலன் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் நவமங்கை நிவாசத்தில் சிறப்பாக நடைபெற்றது.
எங்கள் அன்புக்கும் மதிப்புக்குமுரிய பேராசிரியர் தனபாலன் இன்னும் பல சிறப்புக்களை பெற்று நலமுடன் பல்லாண்டுகாலம்வாழமனம் நிறைந்து வாழ்த்துக்கிறோம்
No Comments

அன்னையர் தின விழா
எமது நிலையத்தில் அன்னையர் தினம் 11.03.2021 அன்று மிக வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட அன்னையர்களுக்கு அன்பளிப்பாக புடவைகள் வழங்கிவைக்கப்பட்டதுடன் கலந்து கொண்ட சுமார் 75 பேருக்கும் மதிய உணவும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
No Comments