கோப்பாய் வெள்ளெருவை பிள்ளையார் கோவிலுக்கு எழுந்தருளி விநாயகர் அன்பளிப்பு
11.09.2018ல் கோப்பாய் வெள்ளெருவை பிள்ளையார் கோவில் கும்பாவிஷேகத்தின் முதல் நாள், நவமங்கை நிவாசத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்ட எழுந்தருளி விநாயகப் பெருமானுக்கு பூசைகள் நடைபெறும் போது
வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட பத்து மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி அன்பளிப்பு
யா/கொக்குவில் இராமகிருஷ்ண வித்தியாலயத்தில் கல்வி பயிலும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட பத்து(10) மாணவர்களுக்கு நவமங்கை நிவாசத்தினால் துவிச்சக்கரவண்டி அன்பளிப்பு செய்யப்பட்டது
கோப்பாய் வெள்ளொருவை பிள்ளையார் முன்பள்ளி விளையாட்டு போட்டி
10.06.2018ல் கோப்பாய் வெள்ளொருவை பிள்ளையார் முன்பள்ளி விளையாட்டு போட்டியில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டபோது
நவமங்கை நிவாசத்துக்கு இலண்டனில் இருந்து விருந்தினர்கள் வருகை
25.06.2018ல் நவமங்கை நிவாசத்துக்கு லண்டன் சைவமுன்னேற்றச்சங்க வாழ்நாள் தலைவரும்,அதி உச்ச மனித நேயமும் சமுக தொண்டருமான திரு V.R இராமநாதன் அவர்களும், லண்டன்-ஈலிங் கனகதுர்க்கை ஆலய அறங்காவலர் ...
9வது தையற்பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பம்
நவமங்கை நிவாசத்தின் 9வது தையற்பயிற்சி வகுப்புக்கள் 18.04.2018ல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதில் 30 பெண் பிள்ளைகள் பயிற்சி பெறுகின்றார்கள்.இப் பயிற்சியானது 5மாதங்கள் நடைபெறும்.பயிற்சியின் இறுதியில் கண்காட்சியும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
கண்காட்சியும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்
எமது நிலையத்தில் தையல் பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களினால் உருவாக்கப்பட்ட ஆடைகளின் கண்காட்சியும் அவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் எமது நிலையத்தில் 17-02-2018 அன்று நடைபெற்றது.
பாடசாலை சீருடை வழங்கி வைப்பு
எமது நிலையத்தினால் நீர்வேலி கூட்டுறவுச் சங்க அங்கத்தவர்களின் பிள்ளைகளில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 67 மாணவர்களுக்கு அவர்களை பாராட்டி நடைபெற்ற விழாவில் பாடசாலை சீருடை வழங்கி வைக்கப்பட்டது.
யா/சன்மார்க்க வித்தியாசாலை மாணவர்களுக்கு காலணிகள் வழங்கிவைப்பு
இன்றைய தினம் ( 23-01-2018) யாழ் சன்மார்க்க வித்தியாசாலையில் கல்வி பயிலும் சகல மாணவர்களுக்கும் எமது அமைப்பினால் காலணிகள் ( shoes and sox) வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
மவ்பிம சிங்கள பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை!
எமது நிலையம் தொடர்பில் மவ்பிம சிங்கள பத்திரிகையில் வெளியாகிய கட்டுரை...
பொங்கல் விழா
எமது நிலையத்தில் நடைபெற்ற பொங்கல் தின நிகழ்வுகளின் சில காட்சிகள்...