No Comments

துவிச்சக்கர வண்டியும் பணமும் அன்பளிப்பு
செல்வி பிருந்தா நித்தியானந்தம் தந்தையை இழந்த நேரம் ஏற்பட்ட அதிர்ச்சியால் வாய் பேசமுடியாமல் போய் உள்ளார்.அளவெட்டி அருணாச்சலம் மகா வித்தியாலத்தில் தரம் 8ல் கல்வி பயிலும் மாணவி.தற்போது அவருடைய தாயும் யாழ் போதனா வைத்தியசாலையில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார்.24.04.019ல் செல்வி பிருந்தாவுக்கு நவமங்கை நிவாசத்தினால் துவிச்சக்கர வண்டியும் அன்பளிப்பு செய்யப்பட்டதுடன் பணமும் கொடுத்து உதவி செய்யப்பட்டது

நவமங்கை நிவாசத்திற்கு ஆளுநர் விஜயமும் இலவச மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வும்
கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் வடமாகாண ஆளுநராக கடமைகளை பொறுப்பேற்று 100 நாட்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு கோப்பாய் நவமங்கை நிவாசத்தில் உரும்பிராய் லயன்ஸ் கழகம் ஏற்பாடு செய்த இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு 19.04.2019ல் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.
No Comments

மாணவனுக்கு துவிச்சக்கரவண்டி அன்பளிப்பு
கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் வடமாகாண ஆளுநராக கடமைகளை பொறுப்பேற்று 100 நாட்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு நீர்வேலி கரந்தன் கிராமத்தின் பாடசாலைப் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தில் 19.04.2019 மாலை இடம்பெற்றது.
இதன்போது கோப்பாய் நவமங்கை நிவாசத்தின் ஸ்தாபகர் திருமதி. சுவர்ணா நவரட்ணம் அவர்களினால் அன்பளிப்பு செய்யப்பட்ட துவிச்சக்கர வண்டியொன்றும் பிரதேசத்தின் மாணவன் ஒருவருக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சின் ...
No Comments

எமது நிறுவுனருக்கு “மாநிலம் பயனுற வாழ் மகளீர்” விருது
எமது நிறுவுனர் சுவர்ணா நவரட்ணம் அவர்களுக்கு 20.03.2019ல் கொழும்பு தமிழ்ச் சங்கம் நடாத்திய சர்வதேச மகளீர் விழாவில் "மாநிலம் பயனுற வாழ் மகளீர்" பெறும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
No Comments

எமது நிறுவுனருக்கு “உத்வேகம் மூட்ட கூடிய பெண்கள் விருது”
வடமாகான மகளிர் விவகார சுகாதார,சமூகசேவைகள்,கைத்தொழில் கூட்டுறவு அமைச்சினால் சர்வதேச மகளிர் 08.03.2019ல் வீரசிங்கம் மண்டபத்தில் கொண்டாப்பட்டது.இவ் விழாவிற்கு கெளரவ விருந்தினராக எமது நிலைய நிறுவுனர் சுவர்ணா நவரட்ணம் அவர்கள் அழைக்கப்பட்டதுடன் "உத்வேகம் மூட்ட கூடிய பெண்கள் விருது" (Inspirational women Award) வழங்கி கெளரவிக்கப்பட்டது.
அமைச்சின் செயலாளர் திருமதி ரூபினி வரதலிங்கத்தினாலும்,மாகாண சபைபேரவைச் செயலாளர் திரு வரதீஸ்வரனாலும் இவ் விருது வழங்கப்பட்டது.அத்துடன் வடமாகாண பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற மகளிர் தின சம்பந்தமான ...
No Comments

ஸ்ரீ சீரடி சாயிபாபா நூதன விக்ரஹ பிரதிஷ்டா மகாகும்பாபிஷேகம்
நவமங்கை நிவாசத்தில் 20.01.2019ல் நடைபெற்ற ஸ்ரீ சீரடி சாயிபாபா நூதன விக்ரஹ பிரதிஷ்டா மகாகும்பாபிஷேகம்
No Comments

சங்காபிஷேகம்
31.01.2018ல் நவமங்கை நிவாசத்தில் உள்ள ஸ்ரீ சீரடிபாபா மந்திரில் நடைபெற்ற சங்காபிஷேகம்
No Comments

உருவச்சிலைகள் திறந்துவைப்பு
12.01.2019ல் எமது பெற்றோர்களான திரு.சின்னத்துரை நவரட்னம் திருமதி.மங்கையற்கரசி நவரட்னம்ஆகியோரின் உருவச்சிலைகள் திறந்து வைக்கப்பட்டது.
No Comments

10வது தையற்பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பம்
24.10.2018ல் நவமங்கை நிவாசத்தில் வறுமைகோட்டிற்கு கீழ்பட்ட படித்த பெண்களுக்கான 10வது தையல் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது.இதில் 30 பெண்கள் பயிற்சி பெறுகிறார்கள் இப் பயிற்சியானது 5மாதங்களுக்கு தொடர்ந்து நடைபெறும் இப் பயிற்சியின் முடிவில் சான்றிதழ்களும் கண்காட்சியும் இடம்பெறும்.
No Comments

தையல் கண்காட்சியும் சான்றிதழ் வழங்கும் வைபமும்
17.09.2018ல் நவமங்கை நிவாசத்தினால் 9வது தையல் பயிற்சியானது வறுமைக் கோட்டிற்கு கீழ்ப்பட்ட பெண்களுக்கு முடிவடைந்துள்ளது.இன்று தையல் கண்காட்சியும் சான்றிதழ் வழங்கும் வைபமும் நடை பெற்றது இதனுடன் இவர்களுக்கு கேக் ஐசிங் பழக்கப்பட்டது.
No Comments