No Comments
நவமங்கை இந்துமாமன்ற அறநெறிபாடசாலையின் முதல் வகுப்பு!
நவமங்கை நிவாசத்தில் நவமங்கை இந்துமாமன்ற அறநெறிபாடசாலையின் முதல் வகுப்பு கடந்த வெள்ளிக்கிழமை (04.09.2020) நடைபெற்றது.
இதில் விழுமியங்களை வலியுறுத்தும் கதைகளினூடன விளக்கங்களும் மிருதங்கவகுப்பும் கற்பிக்கப்பட்டது.
இந்த முதல் வகுப்பில் 30 மாணவர்கள் பங்குபெற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்துமாமன்ற அறநெறிபாடசாலை ஆரம்பம்
நவமங்கை நிவாசத்தினால் இந்துமாமன்ற அறநெறிபாடசாலை இன்று( 23.08.2020).ஆரம்பிக்கப்பபட்டடது.
இதில் 32 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
விருந்தினராக கோப்பாய் பிரதேச செயலர் சுபாசினி மதியழகன், யாழ் பல்கலைக்கழக இந்து நாகரீக துறை பீடாதிபதி சுகந்தினி ஸ்ரீமுரளிதரன் கலந்து சிறப்பித்தனர்.
No Comments
முன்பள்ளிச் சிறார்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு
லண்டனில் வசிக்கும் Ashwin தனது 9 வது பிறந்தநாளை முன்னிட்டு நவமங்கை நிவாசக நிறுவனர் சாதனைப்பெண் சுவர்ணா நவரட்ணம் அவர்கள் மூலமாக இன்று (25/07/2020) கோப்பாய் பிரதேச முன்பள்ளிச் சிறார்களுக்கான பெருமளவான கற்றல் உபகரணங்கள்,பெற்றோர் முன்னிலையில் வழங்கப்பட்டன.
No Comments
ஐந்தாம் கட்ட உதவி வழங்கல் நிகழ்வு
நவமங்கை நிவாசக நிறுவனர் , சமூக சேவகி , அன்னை சுவர்ணா நவரட்ணம் அவர்களால் தாவடி பிரதேசத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள 25 குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் உடைகள் நேற்றையதினம் வழங்கப்பட்டது .
No Comments
மூன்றாம் கட்ட உதவி வழங்கும் நிகழ்வு
3ம் கட்டமாக நிவாரண பணிகள்இன்று( 16.04.2020) நவமங்கை நிவாசத்தினால் பெண் தலைமைத்துவகுடும்பத்தினருக்கும் விழிப்புணரற்றோர் குடும்பத்திணருக்கும் வறுமை க்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்திணருக்கும் உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது.
No Comments
இரண்டாம்கட்ட உதவி வழங்கும் நிகழ்வு
நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக்கருத்தில் கொண்டு நவமங்கை நிவாசத்தினால் இன்றையதினம் இரண்டாம்கட்டமாக உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் முதல்கட்டத்தின் போது பொருட்களை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.
இன்றைய தினம் வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்கள் என கிராமசேவகர்களால் தெரிவு செய்யப்பட்ட 100 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. முதற்கட்டமாக 125 குடும்பங்களிற்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No Comments
உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைப்பு
இன்று காலை (27-03-2020) நவமங்கை நிவாசாத்தில் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட 100 குடும்பத்தினருக்கும் 25 பெண்தலைமைத்துவ குடும்பத்தினருக்கும் உணவு பொதிகள் வழங்கப்பட்டன. இவர்களுக்கு 4 இலட்சம் பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
No Comments
சான்றிதழ் வழங்கும் வைபவமும் கண்காட்சியும்
2020.02.29 அன்று 14ஆவது பிரிவில் தையல் பயிற்சி நெறியை நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவமும் பயிற்சிமுடிவடைந்து பயிற்சியாளர்களினால் தைக்கப்பட்ட ஆடைகளின் கண்காட்சியும் நடைபெற்றது.
No Comments
லண்டன் சைவ முன்னேற்றச் சங்க ஸ்தாபகர் நிலையத்திற்கு வருகை
லண்டன் சைவ முன்னேற்றச் சங்க ஸ்தாபகரும் அதி உச்ச மனிதநேயமும் சமூக தொண்டருமான திரு. V.R.இராமநாதனனும் (இராமண்ணா) விஜிஅக்காவும் இன்றைய சீரடிபாபா பூஜையில் கலந்து சிறப்பித்தார்கள்.
No Comments
கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு பூந்தோட்டம் அமைத்துக் கொடுத்தல்
எமது நிலையத்தினால் கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு மிகவும் அழகாகதொரு பூந்தோட்டம் எமது நிலையத்தின் நிதிப்பங்களிப்பில் அமைத்து கொடுக்கப்பட்டது. அதன் திறப்பு விழா இன்றையதினம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
No Comments