No Comments

உருவச்சிலைகள் திறந்துவைப்பு
12.01.2019ல் எமது பெற்றோர்களான திரு.சின்னத்துரை நவரட்னம் திருமதி.மங்கையற்கரசி நவரட்னம்ஆகியோரின் உருவச்சிலைகள் திறந்து வைக்கப்பட்டது.

“ஶ்ரீ சீரடி சாயி பாபா” நூதன விக்ரஹ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம்
நவமங்கை நிவாசத்தில் "ஶ்ரீ சீரடி சாயி பாபா" நூதன விக்ரஹ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் 20-01-2019 அன்று நடைபெற இருப்பதனால் அன்றைய தினம் இந்நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
No Comments

10வது தையற்பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பம்
24.10.2018ல் நவமங்கை நிவாசத்தில் வறுமைகோட்டிற்கு கீழ்பட்ட படித்த பெண்களுக்கான 10வது தையல் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது.இதில் 30 பெண்கள் பயிற்சி பெறுகிறார்கள் இப் பயிற்சியானது 5மாதங்களுக்கு தொடர்ந்து நடைபெறும் இப் பயிற்சியின் முடிவில் சான்றிதழ்களும் கண்காட்சியும் இடம்பெறும்.
No Comments

எமது நிலைய நிறுவுனருக்கு “அர்ப்பணிப்பான சிறந்த சேவையாளர் விருது”
16.10.2018ல் வடமாகணசபை சமூக சேவைகள் அமைச்சும் யாழ் மாவட்ட சர்வதேச முதியோர் சங்கமும் இணைந்து நடாத்திய விழாவில் "அர்ப்பணிப்பான சிறந்த சேவையாளர் விருது" வழங்கி கெளரவிக்கப்பட்ட போது....
No Comments

இலண்டனில் சைவமக்களின் பிதுர் கிரிகைகள் செய்வதற்கு மண்டபம் அமைத்து கொடுத்தல்
2005ம் ஆண்டு லண்டனில் சைவமக்களின் அந்தியேட்டிக்கிரியைகள் செய்வதற்கு சவுத்என்ட் கடற்கரையில்(Southend- London)உரிய கட்டிடத்தை வாங்குவதற்குரிய முழு நிதி உதவியையும் சுவர்ணா நவரட்னத்தினால் சைவமுன்னேற்றச்சங்கத்திற்கு(Uk)அன்பளிப்பாகக்கொடுக்கப்பட்டது.
No Comments

தையல் கண்காட்சியும் சான்றிதழ் வழங்கும் வைபமும்
17.09.2018ல் நவமங்கை நிவாசத்தினால் 9வது தையல் பயிற்சியானது வறுமைக் கோட்டிற்கு கீழ்ப்பட்ட பெண்களுக்கு முடிவடைந்துள்ளது.இன்று தையல் கண்காட்சியும் சான்றிதழ் வழங்கும் வைபமும் நடை பெற்றது இதனுடன் இவர்களுக்கு கேக் ஐசிங் பழக்கப்பட்டது.
No Comments

கோப்பாய் வெள்ளெருவை பிள்ளையார் கோவிலுக்கு எழுந்தருளி விநாயகர் அன்பளிப்பு
11.09.2018ல் கோப்பாய் வெள்ளெருவை பிள்ளையார் கோவில் கும்பாவிஷேகத்தின் முதல் நாள், நவமங்கை நிவாசத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்ட எழுந்தருளி விநாயகப் பெருமானுக்கு பூசைகள் நடைபெறும் போது
No Comments

வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட பத்து மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி அன்பளிப்பு
யா/கொக்குவில் இராமகிருஷ்ண வித்தியாலயத்தில் கல்வி பயிலும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட பத்து(10) மாணவர்களுக்கு நவமங்கை நிவாசத்தினால் துவிச்சக்கரவண்டி அன்பளிப்பு செய்யப்பட்டது
No Comments

கோப்பாய் வெள்ளொருவை பிள்ளையார் முன்பள்ளி விளையாட்டு போட்டி
10.06.2018ல் கோப்பாய் வெள்ளொருவை பிள்ளையார் முன்பள்ளி விளையாட்டு போட்டியில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டபோது
No Comments

நவமங்கை நிவாசத்துக்கு இலண்டனில் இருந்து விருந்தினர்கள் வருகை
25.06.2018ல் நவமங்கை நிவாசத்துக்கு லண்டன் சைவமுன்னேற்றச்சங்க வாழ்நாள் தலைவரும்,அதி உச்ச மனித நேயமும் சமுக தொண்டருமான திரு V.R இராமநாதன் அவர்களும், லண்டன்-ஈலிங் கனகதுர்க்கை ஆலய அறங்காவலர் திரு K.சிறிரங்கன் அவர்களும் இந்துமாமன்ற உபதலைவரும் சமுக நலன் குழு தலைவருமான விடைக்கொடிச்செல்வர் திரு s.தனபாலா அவர்களும் வருகை தந்த போது
No Comments