No Comments

முன்பள்ளிச் சிறார்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு
லண்டனில் வசிக்கும் Ashwin தனது 9 வது பிறந்தநாளை முன்னிட்டு நவமங்கை நிவாசக நிறுவனர் சாதனைப்பெண் சுவர்ணா நவரட்ணம் அவர்கள் மூலமாக இன்று (25/07/2020) கோப்பாய் பிரதேச முன்பள்ளிச் சிறார்களுக்கான பெருமளவான கற்றல் உபகரணங்கள்,பெற்றோர் முன்னிலையில் வழங்கப்பட்டன.

ஐந்தாம் கட்ட உதவி வழங்கல் நிகழ்வு
நவமங்கை நிவாசக நிறுவனர் , சமூக சேவகி , அன்னை சுவர்ணா நவரட்ணம் அவர்களால் தாவடி பிரதேசத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள 25 குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் உடைகள் நேற்றையதினம் வழங்கப்பட்டது .
No Comments

நான்காம் கட்ட உதவி வழங்கல் நிகழ்வு
சுன்னாகம் , ஏழாலை கிராமங்களில் முள்ளந்தண்டுவடம் பாதித்த வறுமையான பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு , சமூக சேவகி அன்னை சுவர்னா நவரட்ணம் அவர்கள் உலர் உணவு, உடைகளை வழங்கிவைத்துள்ளார்.
No Comments

இதய பூர்வாமான அஞ்சலிகளும் நன்றிகளும்
கோப்பாய் நவமங்கை நிவாசத்தில் கடந்த பத்து வருடங்களாக திருமதி கிருஸ்ண லீலா குட்டித்தம்பி அவர்கள் நல்வாழ்வு வாழ்ந்து இறைவனடி சேர்ந்துள்ளார்.
அவர்களுக்கு அஞ்சலிகள் செலுத்துவதுடன் நவமங்கை நிவாசக பொறுப்பாளரும், சமூக சேவகியும்,தன் உழைப்பால் உயர்வான சேவை செய்யும் அன்னை திருமதி சுவர்னா நவரட்ணம் அவர்கள் தனது தாய்க்கு கடமை செய்வது போல இம் மரணச்சடங்கை நிறைவேற்றியுள்ளார்.
அவருடைய உயர்ந்த இச்சேவை எம் மண்ணுக்குக் கிடைத்ததை எண்ணி நன்றியறிதல்களைத் தெரிவித்துக் ...
No Comments

மூன்றாம் கட்ட உதவி வழங்கும் நிகழ்வு
3ம் கட்டமாக நிவாரண பணிகள்இன்று( 16.04.2020) நவமங்கை நிவாசத்தினால் பெண் தலைமைத்துவகுடும்பத்தினருக்கும் விழிப்புணரற்றோர் குடும்பத்திணருக்கும் வறுமை க்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்திணருக்கும் உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது.
No Comments

இரண்டாம்கட்ட உதவி வழங்கும் நிகழ்வு
நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக்கருத்தில் கொண்டு நவமங்கை நிவாசத்தினால் இன்றையதினம் இரண்டாம்கட்டமாக உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் முதல்கட்டத்தின் போது பொருட்களை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.
இன்றைய தினம் வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்கள் என கிராமசேவகர்களால் தெரிவு செய்யப்பட்ட 100 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. முதற்கட்டமாக 125 குடும்பங்களிற்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No Comments

உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைப்பு
இன்று காலை (27-03-2020) நவமங்கை நிவாசாத்தில் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட 100 குடும்பத்தினருக்கும் 25 பெண்தலைமைத்துவ குடும்பத்தினருக்கும் உணவு பொதிகள் வழங்கப்பட்டன. இவர்களுக்கு 4 இலட்சம் பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
No Comments

சான்றிதழ் வழங்கும் வைபவமும் கண்காட்சியும்
2020.02.29 அன்று 14ஆவது பிரிவில் தையல் பயிற்சி நெறியை நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவமும் பயிற்சிமுடிவடைந்து பயிற்சியாளர்களினால் தைக்கப்பட்ட ஆடைகளின் கண்காட்சியும் நடைபெற்றது.
No Comments

கோப்பாய் நாவலர் தமிழ் வித்தியாலய இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட போது.
இன்று 11.02.2020 கோப்பாய் நாவலர் தமிழ் வித்தியாலய இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு 2020 வித்தியாலய அதிபர் திரு. கிருஸ்ணசாமி தர்மஜீலன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றதுயாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி பீடாதிபதி திரு சுப்பிரமணியம் பரமானந்தம் பிரதம விருந்தினராக, நவமங்கை நிவாசம் இயக்குநர் செல்வி சுவர்ணா நவரட்ணம் சிறப்பு விருந்தினராக, ,இந்த பாடசாலை ஓய்வு நிலை ஆசிரியர் திருமதி ரஞ்சனா தேவி கருணானந்தன்,கோப்பாய் கிராம அலுவலர் செல்வி குணசீலி தியாகராசா ...
No Comments

கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு பூந்தோட்டம் அமைத்துக் கொடுத்தல்
எமது நிலையத்தினால் கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு மிகவும் அழகாகதொரு பூந்தோட்டம் எமது நிலையத்தின் நிதிப்பங்களிப்பில் அமைத்து கொடுக்கப்பட்டது. அதன் திறப்பு விழா இன்றையதினம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
No Comments