No Comments

அன்னையர் தின விழா
எமது நிலையத்தில் அன்னையர் தினம் 11.03.2021 அன்று மிக வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட அன்னையர்களுக்கு அன்பளிப்பாக புடவைகள் வழங்கிவைக்கப்பட்டதுடன் கலந்து கொண்ட சுமார் 75 பேருக்கும் மதிய உணவும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

எமது நிறுவுனருக்கு அன்னை தெரசா விருது
எமது நிறுவுனர் ஸ்வர்ண நவரத்னம் அவர்களுக்கு பன்னாட்டு பெண்கள் அமைப்பினால் சிறந்த சமூக சேவைகளை செய்தமையை கௌரவிக்கும் முகமாக அன்னை தெரசா விருது வழங்கி கௌரவிக்கபடவுள்ளார் என்பதினை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
No Comments

15 வது தையல் பயிற்சி ஆரம்பம்
03.10.2020. வறுமைக்கோட்டிற்குடபட்ட. பெண்பிள்ளைகளுக்கு 15 வது தையல் பயிற்சி இன்று (03-10-2020) ஆரம்பிக்கப்பட்டது. இதில் 32 பிள்ளைகள் சேர்க்கப்பட்டனர். இப்பயிற்சி 5 மாதங்கள் நடைபெற்று சான்றிதழ் வழங்கப்படும்
No Comments

அறநெறிக்கல்வி
அறநெறி பாடசாலை 18.09.2020. நடைபெற்றது. இன்று பண்ணிசை வகுப்பு பாங்காய் நடைபெற்றது.மாணவ செல்வங்கள் குதூகலத்துடன் பண்ணிசைத்து மகிழ்ந்தார்கள்
No Comments

அறநெறிக்கல்வி 3வது வகுப்பு
மனிதன் நல்ல பண்புகளுடன் வாழ அறநெறிக்கல்வி அவசியமானது. அந்த வகையில் சிறுவயது முதல் அறவிழுமியங்களை மாணவர்கள் மத்தியில் விதைப்பதற்காக எடுத்த முயற்சியின் 3வது வகுப்பு இன்று(11.09.2020) நடைபெற்றது.இன்று ஆத்திசூடி பண்ணிசை நடனம் என்பன கற்பிக்கப்பட்டது.35 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
No Comments

நவமங்கை இந்துமாமன்ற அறநெறிபாடசாலையின் முதல் வகுப்பு!
நவமங்கை நிவாசத்தில் நவமங்கை இந்துமாமன்ற அறநெறிபாடசாலையின் முதல் வகுப்பு கடந்த வெள்ளிக்கிழமை (04.09.2020) நடைபெற்றது.
இதில் விழுமியங்களை வலியுறுத்தும் கதைகளினூடன விளக்கங்களும் மிருதங்கவகுப்பும் கற்பிக்கப்பட்டது.
இந்த முதல் வகுப்பில் 30 மாணவர்கள் பங்குபெற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No Comments

இந்துமாமன்ற அறநெறிபாடசாலை ஆரம்பம்
நவமங்கை நிவாசத்தினால் இந்துமாமன்ற அறநெறிபாடசாலை இன்று( 23.08.2020).ஆரம்பிக்கப்பபட்டடது.
இதில் 32 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
விருந்தினராக கோப்பாய் பிரதேச செயலர் சுபாசினி மதியழகன், யாழ் பல்கலைக்கழக இந்து நாகரீக துறை பீடாதிபதி சுகந்தினி ஸ்ரீமுரளிதரன் கலந்து சிறப்பித்தனர்.
No Comments

முன்பள்ளிச் சிறார்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு
லண்டனில் வசிக்கும் Ashwin தனது 9 வது பிறந்தநாளை முன்னிட்டு நவமங்கை நிவாசக நிறுவனர் சாதனைப்பெண் சுவர்ணா நவரட்ணம் அவர்கள் மூலமாக இன்று (25/07/2020) கோப்பாய் பிரதேச முன்பள்ளிச் சிறார்களுக்கான பெருமளவான கற்றல் உபகரணங்கள்,பெற்றோர் முன்னிலையில் வழங்கப்பட்டன.
No Comments

ஐந்தாம் கட்ட உதவி வழங்கல் நிகழ்வு
நவமங்கை நிவாசக நிறுவனர் , சமூக சேவகி , அன்னை சுவர்ணா நவரட்ணம் அவர்களால் தாவடி பிரதேசத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள 25 குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் உடைகள் நேற்றையதினம் வழங்கப்பட்டது .
No Comments

நான்காம் கட்ட உதவி வழங்கல் நிகழ்வு
சுன்னாகம் , ஏழாலை கிராமங்களில் முள்ளந்தண்டுவடம் பாதித்த வறுமையான பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு , சமூக சேவகி அன்னை சுவர்னா நவரட்ணம் அவர்கள் உலர் உணவு, உடைகளை வழங்கிவைத்துள்ளார்.
No Comments